மியாமி ஓபன் டென்னிஸ்; இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்
இகா ஸ்வியாடெக் , உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா மோதினர் .;

புளோரிடா,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் , உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா மோதினர் .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 7(7)-6(5), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார் .