இலங்கை தொடரில் பங்கேற்க தமிழக இளையோர் கைப்பந்து அணி இன்று பயணம்

இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் 21 வயதுக்கு உட்பட்ட தமிழக ஆண்கள் கைப்பந்து அணி இன்று இலங்கை புறப்பட்டு செல்கிறது.

Update: 2023-03-30 21:14 GMT

சென்னை,

இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் 21 வயதுக்கு உட்பட்ட தமிழக ஆண்கள் கைப்பந்து அணி இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை புறப்பட்டு செல்கிறது. ஏப்ரல் 7-ந் தேதி வரை இலங்கையில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழக இளையோர் கைப்பந்து அணி, அந்த நாட்டின் ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளுக்கு எதிராக 5 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இலங்கை செல்லும் தமிழக கைப்பந்து அணியினரை பாராட்டி வழியனுப்பும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் கலந்து கொண்டு அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், துணை சேர்மன் எம்.அழகேசன், இணைசெயலாளர் ஏ.கே.மகேந்திரன் உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இலங்கை தொடரில் பங்கேற்கும் தமிழக அணி வருமாறு:-

எம்.கபிலன், வி.எஸ்.முனிஷ், எஸ்.சதீஷ், எம்.தீபக் குமார், ஜோயல் பெஞ்சமின், டி.மாதவன், எட்வின் மரியோன், ஆதித்ய குணசீலன், கே.கோபிநாத், வி.தனிஷ், கே.குருவசந்த், சி.வேணு, கே.ஆனந்தகுமார், ஆர்.ரகுராம், பயிற்சியாளர்: கே.சந்திரசேகரன், உதவி பயிற்சியாளர்: எஸ்.ஜெயப்பிரகாஷ், மானேஜர்: ஜி.நவநீத கிருஷ்ணன்.

Tags:    

மேலும் செய்திகள்