செஸ் ஒலிம்பியாட்: 5-வது சுற்றில் இந்திய அணி வெற்றி

5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.;

Update: 2024-09-15 22:06 GMT

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.

இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினர். தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா- நிஜாத் அப்சோவ் இடையிலான ஆட்டம் 34-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்திய ஆண்கள் அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2½-1½ என்ற கணக்கில் கஜகஸ்தானை வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்