புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி..!

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.

Update: 2022-11-21 15:41 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-30 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 43 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் யு.பி.யோத்தா-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்