புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் வெற்றி..!

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-11-05 16:56 GMT

image courtesy: ProKabaddi twitter

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது.

இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 45-40 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் தமிழ் தலைவாஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 39-31 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்