புரோ கபடி லீக்: டெல்லி அணியை வீழ்த்தி புனே வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பல்டன் அணிகள் மோதின

Update: 2022-12-03 15:24 GMT

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பல்டன் அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய புனே அணி 47- 44 என்ற கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்