புரோ கபடி லீக் : பாட்னா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
35-30 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு,
9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.இன்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கடைசி சில நேரத்தில் ஒரு சில புள்ளிகளை ஜெய்ப்பூர் அணி எடுத்ததால் இறுதியில் 35-30 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது.