புரோ கபடி லீக்: யு மும்பா அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

இன்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா - தபாங் டெல்லி அணிகள் மோதின.

Update: 2022-12-06 16:08 GMT

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் அக்டோபர் மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் யு மும்பா - தபாங் டெல்லி அணிகள் மோதின.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 41-24 என்ற கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்