புரோ கபடி லீக்: அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி..!

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.

Update: 2022-11-20 15:37 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் 2-வது போட்டியில் பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்