புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி ஆட்டம் 'டிரா'

பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2022-12-08 15:39 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 46 புள்ளிகள் எடுத்தன. இதையடுத்து பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி 46-46 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்று வரும் 2-வது போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்