புரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி

இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-11-12 15:37 GMT

image courtesy: ProKabaddi twitter

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 46-27 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்