புரோ கபடி : தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
46-26 என்ற கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு,
9-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணியினர் ஆட்ட நேர முடிவில் 25 - 18 என்ற புள்ளி கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடந்த 2வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் 46-26 என்ற கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.