புரோ கபடி: அரியானாவை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-10-17 16:29 GMT

image courtesy: Dabang Delhi KC twitter

பெங்களூரு,

புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் 33-32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 38-36 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி 5-வது வெற்றியை பெற்றது.

இதையடுத்து தபாங் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்