ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

Update: 2023-12-17 01:37 GMT

Image Courtesy : @sports_odisha

கட்டாக்,

ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சரிவில் இருந்து மீண்டு வந்து 19-21, 21-14, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அத்துடன் கடந்த அக்டோபரில் நடந்த உலக ஜூனியர் அரைஇறுதியில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் 21-18, 21-14 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரரான நடப்பு சாம்பியன் கிரண் ஜார்ஜை தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆயுஷ் ஷெட்டி-சதீஷ் குமார் மோதுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 16-21, 5-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹராவிடம் (ஜப்பான்) வீழ்ந்து நடையை கட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்