புரோ கபடி லீக்: யு மும்பா அணி அதிர்ச்சி தோல்வி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.
புனே,
12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 99-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாட்னா பைரட்ஸ் 38-28 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது. பாட்னா அணியில் தேவாங்க் 14 புள்ளிகள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 17-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா அணிக்கு இது 10-வது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் யு மும்பா அணிக்கு அதிர்ச்சி அளித்து 5-வது வெற்றியை பெற்றது.