நான்டெஸ் சர்வதேச பேட்மிண்டன் - சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜோடி

அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Update: 2023-06-20 11:26 GMT

நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி , சீன தைபேயின் ஹுங் என்-டிஸு லின் யு பெய் ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

Tags:    

மேலும் செய்திகள்