பேட்மிண்டன் புதிய தரவரிசை - பி.வி. சிந்து , லக்ஷயா சென் முன்னேற்றம்

பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது

Update: 2023-07-11 22:54 GMT

 பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் 7 இடங்கள் உயர்ந்து 12-வது இடத்தை பிடித்துள்ளார். கனடா ஓபனை வென்றதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது.

மற்றொரு இந்திய வீரர் பிரனாய் 9-வது இடம் வகிக்கிறார். ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்