ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ்:தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்

பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த பூஜா ஆர்த்தி முன்னாள் சர்வதேச டிரையத்லான் வீராங்கனை அமுதாவின் மகள் ஆவார்.

Update: 2023-08-23 04:45 GMT

டாலியன்,

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள டாலியன் நகரில் நடந்தது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் பெண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்ட தனிநபர் பிரிவில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழக வீராங்கனை பூஜா ஆர்த்தி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 10-12, 10-12, 11-8, 11-7, 12-10 என்ற செட் கணக்கில் மலேசியாவின் தனுசாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்