புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின.

Update: 2024-10-23 01:41 GMT

image courtesy: ProKabaddi twitter

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் நேற்றிரவு நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஜெய்ப்பூர் அணி 52-22 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 57-36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் அபார வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்