புரோ கபடி லீக்: தபாங் டெல்லி - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-10-21 01:43 GMT

Image Courtesy: @DabangDelhiKC

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்