புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

Update: 2024-10-23 23:25 GMT

Image Courtesy: @ProKabaddi

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்