புரோ கபடி லீக்; புனேரி பால்டனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.;

Update:2024-10-23 22:05 IST

Image Courtesy: @ProKabaddi

ஐதராபாத்,

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ் தலைவாஸ் 35-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்