ரோலர் ஸ்கேட்டிங்:
ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்பீட் ஸ்கேட்டிங் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கார்திகா 5ம் இடம் பிடித்தார். இப்போட்டியில் சீன தைபே வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தையும், தென்கொரிய வீராங்கனை வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி போட்டி 62ல் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியில் அனஹட் சிங், அப்ஹெ சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு ஏ போட்டி 57ல் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற செட்களில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்திய அணியில் தீபிகா, ஹரிந்தர்பால் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
பதக்க பட்டியல்:
ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
துப்பாக்கிசுடுதல்:
ஆண்கள் டிராப் 50 குழு
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் 50 குழு பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. டெரியஸ், சொரவர் சிங், பிரித்வி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
பெண்கள் டிராப் 50 குழு
துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிராப் 50 குழு பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் மணீஷா கீர், பிரீத்தி ராஜக், குமாரி ராஜேஷ்வரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
பதக்க பட்டியல்
ஆசிய விளையாட்டு போட்டியில் 10 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
கோல்ப்:
கோல்ப் பெண்கள் தனிநபர் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். 271 புள்ளிகள் பெற்ற அதிதி அசோக் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிராப் 50 குழு ஸ்டேஜ் 2 போட்டியில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. இந்திய வீராங்கனைகள் குமாரி ராஜேஷ்வரி, மணீஷா கீர், பிரீத்தி ராஜக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3ம் இடத்தில் உள்ளது.
துப்பாக்கி சுடுதல்:
துப்பாக்கி சுடுதல் பெண்கள் டிராப் 50 ஸ்டேஜ் 2 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் மணீஷா கீர் 6ம் இடத்திலும், பிரீத்தி ராஜக் 9ம் இடத்திலும், குமாரி ராஜேஷ்வரி 11ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் முதல் 6 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வில்வித்தை:
வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் ரிகர்வி தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் அதனு தாஸ் 4ம் இடத்தையும், திராஜ் பூமதேவ்ரா 7ம் இடத்தையும், துஷார் பிரபாகர் 15ம் இடத்தையும், ரினல் சவுகன் 17ம் இடத்தையும் பிடித்தனர்.