லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்

Update: 2023-10-01 01:19 GMT
Live Updates - Page 4
2023-10-01 03:36 GMT

வில்வித்தை:

வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்ட் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஜோதி சூரிகா 1ம் இடத்தையும், அதிதி கோபிசந்த் 4ம் இடத்தையும், பெட்நெட் கவுர் 12ம் இடத்தையும், அவ்நெட் கவுர் 15ம் இடத்தையும் பிடித்தனர். 

2023-10-01 03:29 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் குழு ஸ்டேஜ் 2 தகுதிச்சுற்று போட்டியில் டெரியஸ், சொரவர் சிங், பிரித்வி ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2ம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிராப் குழு சுற்றில் தங்கப்பதக்கத்திற்கான போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

2023-10-01 03:26 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் ஆண்கள் டிரப் -50 ஸ்டேஜ் 2 தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் டெரியஸ் 2ம் இடத்தையும், சொரவர் சிங் 4ம் இடத்தையும், பிரித்வி ராஜ் 12ம் இடத்தையும் பிடித்தனர்.

2023-10-01 02:51 GMT

தடகளம்:

தடகளம் ஆண்கள் 200 மீட்டர் ஓடப்பந்தையம் ரவுண்ட் 1 - ஹீட் 4 சுற்றில் இந்திய வீரர் அமலன் 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் ஆண்கள் 200 மீட்டர் ஓடப்பந்தையம் அரையிறுதி சுற்றுக்கு அமலன் தகுதி பெற்றார்.

2023-10-01 02:44 GMT

கேனோ ஸ்பிரிண்ட்:

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கயக் ஒற்றையர் 500 மீட்டர் ஹீட் 2 போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா தேவி 4ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு சோனியா தேவி தகுதி பெற்றார்.

2023-10-01 02:41 GMT

கேனோ ஸ்பிரிண்ட்:

கேனோ ஸ்பிரிண்ட் பெண்கள் கேனோ ஒற்றையர் 200 மீட்டர் ஹீட் 1 போட்டியில் இந்தியாவின் மேஹா பிரதீப் 5ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இப்போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு மேஹா தகுதி பெற்றார்.

2023-10-01 02:33 GMT

வில்வித்தை:

வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்ட் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஜோதி சூரிகா 1ம் இடத்திலும், அதிதி கோபிசந்த் 6ம் இடத்திலும், பெட்நெட் கவுர் 12ம் இடத்திலும், அவ்நெட் கவுர் 19ம் இடத்திலும் உள்ளனர்.

2023-10-01 02:31 GMT

வில்வித்தை:

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் ரிகர்வி தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் திராஜ் பூமதேவ்ரா 2ம் இடத்திலும், அதனு தாஸ் 8ம் இடத்திலும், துஷார் பிரபாகர் 16ம் இடத்திலும் உள்ளனர்.

2023-10-01 02:11 GMT

தடகளம்:

தடகளம் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் ரவுண்ட் 1 - ஹீட் 1 சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ரா 3ம் இடம் பிடித்தார். 

2023-10-01 02:06 GMT

தடகளம்:

தடகளம் பெண்கள் ஹெப்டத்லான் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் நந்தினி 3ம் இடத்தையும், ஸ்வப்னா 7ம் இடத்தையும் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்