புரோ கபடி லீக்; டெல்லியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த யு மும்பா

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது.;

Update:2024-11-05 22:01 IST
புரோ கபடி லீக்; டெல்லியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த யு மும்பா

image courtesy; @ProKabaddi

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் யு மும்பா - தபாங் டெல்லி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.

இதனால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 32-26 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லியை வீழ்த்தி யு மும்பா தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்