ஜூனியர் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.;
பப்ளோ,
அமெரிக்காவின் பப்ளோ நகரில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதி சுற்றில் கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் சிமோன் லிரிகாவை (ஜெர்மனி) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.