ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Update:2023-09-29 06:32 IST
Live Updates - Page 3
2023-09-29 04:57 GMT

நீச்சல்:

நீச்சல் ஆண்கள் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் ஹீட்ஸ் சுற்றில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் 6ம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆண்கள் 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவின் இறுதிப்போட்டிக்கு சஜன் பிரகாஷ் தகுதி பெற்றுள்ளார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அனீஷ் 13ம் இடம் பிடித்தார். இதனால், இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை அனீஷ் இழந்தார்.

ஆண்கள் 400 மீட்டர் பிரிஸ்டைல் ஹீட்ஸ் சுற்றில் இந்திய வீரர்கள் ஆர்யன் நெஹ்ரா 11ம் இடத்தையும், ராவத் 17ம் இடத்தையும் பிடித்தனர். இதனால் இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்திய வீரர்கள் இழந்தனர்.

பெண்கள் 4x100 மீட்டர் மெட்லி ரிலே குழு ஹீட்ஸ் சுற்றில் இந்திய அணி 9ம் இடம் பிடித்தது. இதனால், இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் இழந்தனர்.

2023-09-29 04:25 GMT

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 4-2 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுக்கு மணிகா பத்ரா முன்னேறியுள்ளார். 

2023-09-29 04:17 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-09-29 04:03 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கப்பதக்கத்தையும், இஷா சிங் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

2023-09-29 03:58 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் பெண்கள் குழு காலிறுதி சுற்றில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியாவின் பி.வி.சிந்து, அஷ்மிதா சாலிஹா, காயத்ரி ஆகியோர் அடங்கிய குழு தாய்லாந்திடம் தோல்வியடைந்தது. 0-3 என்ற செட்களில் தாய்லாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் பேட்மிண்டன் குழு சுற்றில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 

2023-09-29 03:34 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.

2023-09-29 03:30 GMT

டென்னிஸ்:

டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ராம்குமார், சகெத் மைனெனி இணை சீன தைபே அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவை வீழ்த்தி சீனா தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

2023-09-29 03:18 GMT

நீச்சல்:

நீச்சல் ஆண்கள் 200 மீட்டர் பேக்ஸ்டோக் ஹீட்ஸ் பிரிவில் இந்திய வீரர் அட்வித் பேஜ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதிப்போட்டி இன்று மாலை 5.30 நடைபெற உள்ளது.

2023-09-29 03:14 GMT

நீச்சல்:

நீச்சல் பெண்கள் 800 மீட்டர் பிரிஸ்டைல் ஸ்லோ ஹீட் 2 பிரிவில் இந்தியாவின் ரிட்டி அகர்வால் 5ம் இடம் பிடித்தார். 

2023-09-29 03:07 GMT

பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டியில் 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்