ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

Update:2023-09-29 06:32 IST
Live Updates - Page 4
2023-09-29 02:56 GMT

நீச்சல்:

நீச்சல் பெண்கள் 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவின் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை நினா வெங்கடேஷ் 14ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை நினா இழந்தார்.

2023-09-29 02:37 GMT

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதல் ஆண்கள்  50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழு பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தமூர், ஸ்வப்நில் சுரேஷ், அகில் ஆகியோர் அடங்கிய குழு1769 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

2023-09-29 02:30 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது.

2023-09-29 02:22 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் இஷா சிங் 5ம் இடத்தையும், பாலக் 7ம் இடத்தையும், திவ்யா 10ம் இடத்தையும் பிடித்தனர்.

இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி இந்திய வீராங்கனைகள் இஷா சிங், பாலக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

2023-09-29 02:19 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் பெண்கள் அணி காலிறுதி சுற்றில் இந்தியாவின் பிவி சிந்துவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தாய்லாந்து வீராங்கனை வெற்றிபெற்றார்.

2023-09-29 01:53 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது.

2023-09-29 01:50 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் இஷா சிங் 4ம் இடத்திலும், பலக் 6ம் இடத்திலும், திவ்யா 16ம் இடத்திலும் உள்ளனர்.

2023-09-29 01:21 GMT

துப்பாக்கி சுடுதல்:

துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவின் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி பிரதாப் சிங் தமூர் 2ம் இடத்திலும், ஸ்வப்நில் சுரேஷ் 3ம் இடத்திலும், அகில் 13ம் இடத்திலும் உள்ளனர்.

2023-09-29 01:11 GMT

தடகளம்

தடகளம் ஆண்கள் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக் இறுதி சுற்றில் இந்திய வீரர்கள் விகாஷ் சிங் 5ம் இடத்தையும், சந்தீப் குமார் 10ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் சீன வீரர்கள் தங்கம், வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். வெண்கல பதக்கத்தை ஜப்பான் வீரர் வென்றார்.

2023-09-29 01:08 GMT

தடகளம்

தடகளம் பெண்கள் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பிரியங்கா 5ம் இடம் பிடித்தார். சீன வீராங்கனை முதல் இடம் பிடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்