ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஆசிய விளையாட்டு தொடரில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

Update: 2023-09-29 01:02 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. தடகள போட்டியில்  குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.

Live Updates
2023-09-29 14:31 GMT



2023-09-29 14:05 GMT

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. தடகள பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவேயாகும். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரன் பலியான் 17.36  மீட்டர் தூரம் வீசி வெண்கலம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் இதை அடைந்தார். இதே போட்டியில் சீனாவின் லிஜிஜோ கோங் மற்றும் ஜியாவுன் சாங் ஆகியோர் முறையே 19.58 மற்றும் 18.92 மீட்டர் தூரம் வீசி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர்.

2023-09-29 13:16 GMT

ஸ்குவாஷ்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மலேசியாவின் எயின் யோவ் என்ஜி-யை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் சவுரவ் கோஷல்  அணி 3-1 (11-8, 11-6, 10-12, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

2023-09-29 12:16 GMT

மகளிர் ஹாக்கி அணி: குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. இப்போட்டியில் மலேசியா அணியை 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தியாவின் மோனிகா, தீப் கிரேஸ் எக்கா, நவ்நீத் கவுர், நேஹா, சங்கீதா மற்றும் லல்ரேம்சியாமி ஆகியோர் கோல்களை அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். 

2023-09-29 11:28 GMT

மகளிர் ஹாக்கி: மகளிர் ஹாக்கி போட்டியில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டத்தின் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், தற்போது வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இதனால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

2023-09-29 11:08 GMT

ஆசிய விளையாட்டு தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி  அரையிறுதிக்கு  தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. 37 ஆண்டுகளுக்கு பிறகு பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணி பதக்கம் வெல்ல உள்ளதன் மூலம் புதிய வரலாறு படைக்க உள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியா - கொரியா ஆகிய இரு அணிகளில் ஒன்றை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணி தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


2023-09-29 10:41 GMT

ஆசிய விளையாட்டு: பேட்மிண்டன் ஆடவர் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் அசத்தல் வெற்றியை பெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் பேட்மிண்டன் பிரிவில் இந்திய அணிக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது

2023-09-29 10:26 GMT

ஆசிய விளையாட்டு தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

2023-09-29 09:46 GMT

டேபிள் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அய்ஹிகா & சுதிர்தா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.


2023-09-29 09:18 GMT

குத்துச்சண்டை: 71-80 கிலோ எடை பிரிவில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அக்‌ஷயா சாகர் கிர்கிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை பறிகொடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்