சைக்கிளிங் டிரக்:
சைக்கிளிங் டிரக் போட்டியில் ஆண்கள் கெய்ரின் பஸ்ட் ரவுண்ட் ஹீட் -2 சுற்றில் இந்திய வீரர் டேவிட் பெக்கம் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் டேவிட் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதே சுற்றில் மறுபரிசீலனை போட்டியில் ஹீட் - 2 சுற்றில் இந்திய வீரர் ஈசோவ் 3ம் இடம் பிடித்தார். இதன் மூலம் ஈசோவும் சைக்கிளிங் டிராக் ஆண்கள் கெய்ரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இ-ஸ்போர்ட்ஸ்:
இ-ஸ்போர்ட்ஸ் டோடா2 குரூப் ஏ போட்டி 1ல் இந்தியா - கஜகஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி கஜகஸ்தான் வெற்றிபெற்றது.
குத்துச்சண்டை:
பெண்கள் குத்துச்சண்டை 54-57 கிலோ எடைப்பிரிவின் பிரிலிமினெரிஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியாவின் பர்வீன் சீனாவின் ஜிஜன் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை பர்வீன் அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பெண்கள் குத்துச்சண்டை 54-57 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பர்வீன் நுழைந்துள்ளார்.
பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.
துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தமூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டென்னிஸ்:
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய ஜோடி போபண்ணா - ருதுஜா போசேல் இணை 6-1, 3-6, 10-4 என்ற செட்களில் சீன தைபே நாட்டின் இணையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியுள்ளது.
பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் இந்தியா...!
ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - சிங்கப்பூர் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சிங்கப்பூரை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய இணை மனவ் தக்கர், மனுஷ் ஷா வெற்றிபெற்றனர். இந்த வெற்றியின் மூலம் டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
டேபிள் டென்னிஸ்:
டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றின் 56வது போட்டியில் இந்தியாவின் கமல் சரத், சத்யன் இணை சீனாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் 3-0 என்ற புள்ளிகளில் இந்தியாவை வீழ்த்தி சீனா வெற்றிபெற்றது.
ஸ்குவாஷ்:
ஸ்குவாஷ் பெண்கள் அணி அரையிறுதி சுற்றில் இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதின. இப்போட்டியில் 2-1 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஹாங்காங் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த போதும் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.