தேசிய கைப்பந்து போட்டி: தமிழக அணிக்கு முதல் வெற்றி

சென்னையில் நடந்து வரும் தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக அணி முதல் வெற்றியை பெற்றது. தேசிய கைப்பந்து 65–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரி

Update: 2016-12-25 20:02 GMT

சென்னை,

சென்னையில் நடந்து வரும் தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக அணி முதல் வெற்றியை பெற்றது.

தேசிய கைப்பந்து

65–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்றுள்ளன.

2–வது நாளான நேற்று ஆண்களில் ‘பி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொண்டது. முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த தமிழக அணி அதன் பிறகு ஆக்ரோஷமாக விளையாடி சரிவில் இருந்து எழுச்சி பெற்றது. 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த மோதலில் தமிழக அணி 19–25, 22–25, 25–22, 25–18, 15–13 என்ற செட் கணக்கில் ஆந்திராவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் சர்வீசஸ் அணியிடம் தோற்று இருந்தது. தமிழக அணி அடுத்த லீக்கில் கேரளாவை இன்று (மாலை 6 மணி) எதிர்கொள்கிறது.

இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 25–16, 25–17, 21–25, 25–20 என்ற செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை வென்றது. இதே போல் பஞ்சாப் அணி, ராஜஸ்தானையும், கேரள அணி, சர்வீசையும் வீழ்த்தின.

தமிழக அணி வெற்றி

பெண்கள் பிரிவில் தனது முதல் லீக்கில் தெலுங்கானாவிடம் தோல்வி கண்டு இருந்த தமிழக அணி நேற்று 2–வது ஆட்டத்தில் பஞ்சாப்புடன் மோதியது. முதல் இரு செட்டை இழந்தாலும் சுதாரித்து மீண்ட தமிழக அணி 18–25, 20–25, 25–18, 25–9, 15–10 என்ற செட் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

மற்ற ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே 25–16, 25–16, 25–8 என்ற நேர் செட்டில் ஆந்திராவையும், மராட்டிய அணி 25–21, 29–27, 25–15 என்ற செட் கணக்கில் மேற்கு வங்காளத்தையும், கேரள அணி 25–13, 25–13, 25–12 என்ற நேர் செட்டில் தெலுங்கானாவையும் தோற்கடித்தன.

மேலும் செய்திகள்