மெதுவாக பந்துவீச்சு புகார்: இலங்கை அணிக்கு அபராதம்
மெதுவாக பந்துவீசிய புகாரில் இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இரு ஓவர் தாமதமாக வீசியது தெரிய வந்ததால் அந்த அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் மெதுவாக பந்துவீசிய புகாரில் சிக்கிய முதல் அணி இலங்கை ஆகும்.