பெண்கள் டி20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..!

பாகிஸ்தான் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2023-02-16 02:42 GMT

கேப்டவுடன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த்து. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பாக விளையாடிய முனீபா அலி சதமடித்து அசத்தினார். அவர் 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய அய்ரலாந்து 16.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் பாகிஸ்தான் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரெண்டர்காஸ்ட் 31 ரன்களும் , எமியர் ரிச்சர்ட்சன் 28 ரன்களும் எடுத்தனர் .பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்