பெண்கள் டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இன்று பார்ல் நகரில் நடந்த ஆட்டத்தில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஹேய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

Update: 2023-02-11 17:08 GMT

பார்ல்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டி தொடரில் இன்று பார்ல் நகரில் நடந்த ஆட்டத்தில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஹேய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹேய்லி மேத்யூஸ் 42 ரன்களும் , ஷெமைன் காம்பெல்லே 34 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

தொடர்ந்து 136 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 3  விக்கெட் இழப்பிற்கு138 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்