மகளிர் டி20 கிரிக்கெட்; கேபி லூயிஸ் அபார சதம்... இலங்கையை வீழ்த்திய அயர்லாந்து

அயர்லாந்து தரப்பில் அபாரமாக பேட்டிங் ஆடிய கேபி லூயிஸ் சதம் (119 ரன்) அடித்து அசத்தினார்.

Update: 2024-08-14 00:26 GMT

Image Coutest: @IrishWomensCric

டப்ளின்,

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் அபாரமாக பேட்டிங் ஆடிய கேபி லூயிஸ் சதம் (119 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தி திரில் வெற்றி பெற்றது.

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷித சமரவிக்ரம 65 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் ப்ரீயா சார்ஜென்ட், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 16ம் தேதி நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்