அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா..? - சென்னை அணியின் துணை பயிற்சியாளர் பதில்

தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.;

Update:2024-05-19 16:02 IST

பெங்களூரு,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பி சாம்பியன் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் சென்னை அடுத்து சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ். தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்ற கருத்துகள் காணப்பட்டன. அதற்கேற்றவாறே இந்த சீசனுக்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்தார். அத்துடன் முழங்கால் வலியால்  அவதிப்படும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று சென்னை அணியின் துணை பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் எதிர்காலத்தைப் பற்றி யாராலும் யூகிக்க முடியாது. அவர் என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். பல ஆண்டுகளாக அவர் நன்றாக ஆடி வருகிறார். எனவே நன்றாக விளையாடும் அவர்தான் அந்த முடிவைப் பற்றி எடுப்பார். கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் அவர் ஒரு நம்ப முடியாத அற்புதமான வீரர்.

அவரைப் பற்றி நிறைய நினைவுகள் இருக்கின்றன. அவர் எங்களுடைய வீரர்களுக்கு நிறைய தகவல் மற்றும் அறிவை பகிர்ந்து உதவி செய்து வருகிறார். அது தோனியை போல் விளையாடுவதை பற்றி கிடையாது. தோனியை போல் விளையாட்டை புரிந்து கொள்வதைப் பற்றியதாகும். எனவே அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்