ரஞ்சி கிரிக்கெட்டில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 122 ரன் சேர்ப்பு

பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.;

Update: 2024-01-13 18:21 GMT

அகர்தலா,

ரஞ்சி கிரிக்கெட்டில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் தனது 2-வது லீக் ஆட்டத்தில் திரிபுரா அணியுடன் அகர்தலாவில் மோதுகிறது. பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

பனியின் தாக்கம் காரணமாக 2-வது நாளான இன்றைய ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட பாலசுப்பிரமணியம் சச்சின் 5 ரன்னிலும், விமல்குமார் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 47 ரன்னுடனும் (105 பந்து, 7 பவுண்டரி), விஜய் சங்கர் 50 ரன்னுடனும் (83 பந்து, 9 பவுண்டரி) களத்தில் இருந்தனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்