டிஎன்பிஎல்: திண்டுக்கல் அபார பந்துவீச்சு..! திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
19.1 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 10 விக்கெட் இழந்து 120 ரன்கள் எடுத்தது
கோவை,
7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. . இதன்படி கோவையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி திருச்சி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி தடுமாறியது. இதனால் திருச்சி அடுத்தடுத்து விக்கெட் இழந்தது.
19.1 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 10 விக்கெட் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆர். ராஜ் குமார் 39 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட் , அஸ்வின் , சரவண குமார் , சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 121 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடுகிறது.