ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.;

Update:2024-08-08 18:51 IST
ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 5-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்

துபாய்,

இலங்கை - இந்தியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த 2, 3 மற்றும் 4-ம் இடங்களில் முறையே இந்தியாவின் சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக குல்தீப் யாதவ் 5 இடங்கள் முன்னேறி, முகமது சிராஜுடன் 4-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். மற்றொரு இந்திய வீரரான பும்ரா 8-வது இடத்தில் உள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றமுமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்