பேட்டிங் நடுவில் மைதானத்திற்குள் வந்த சிறுவன்.. ரோகித்தின் நெகிழ்ச்சி செயல்..!
மைதானத்திற்குள் திடீரென்று நுழைந்த சிறுவன், ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்து, ஆரத்தழுவினார்.
ராய்ப்பூர்,
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் நுழைந்த சிறுவன், கேப்டன் ரோகித் சர்மாவை ஆரத்தழுவினார்.
நேற்று ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மைதானத்திற்குள் திடீரென்று நுழைந்த சிறுவன், ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்து, ஆரத்தழுவினார்.
தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் சிறுவனை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது சிறுவனை இழுத்துச்செல்லும்போது, சிறுவனை காயப்படுத்த வேண்டாம் என்று ரோகித் சர்மாக் கூறினார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.