டெஸ்ட் தொடர்- தென் ஆப்பிரிக்கா புறப்பட்ட ரோகித் சர்மா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது

Update: 2023-12-15 17:01 GMT

மும்பை,

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற உள்ளன. ஒருநாள் தொடர் 17-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 26-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்