சென்னையில் மேலும் 2 இடங்களில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி
இரண்டு இடங்களிலும் மின்னொளி வசதியுடன் 8 ஆடுகளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.;
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி ஏற்கனவே சென்னை துரைப்பாக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் மேலும் இரண்டு இடங்களில் சூப்பர் கிங்ஸ் அகாடமி சென்னையில் தொடங்கப்படுகிறது. இதன்படி போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரியிலும், வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியிலும் அமைக்கப்படுகிறது.
இவ்விரு இடங்களிலும் மின்னொளி வசதியுடன் 8 ஆடுகளங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. வருகிற 14-ந்தேதி முதல் இங்கு 5 வயது முதல் 23 வயதுக்குட்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.