சூப்பர் 12 சுற்று: அயர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

. இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2022-10-23 07:55 GMT

ஹோபர்ட்,

ஹோபர்ட்டில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆன்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் தேர்வு செய்தது . முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து.

அந்த அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங் 25 பந்துகளில் 34 ரன்களும் ,லோர்கன் டக்கர் 42 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் ஹசரங்கா ,மகேஷ் தீக்சனா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்நது 129 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி விளையாடியது.

அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குசால்மென்டிஸ் 43 பந்தில் 68 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), தனஞ்செய டி.செல்வா, அசலங்கா தலா 31 ரன்னும் எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்