சூப்பர் 12 சுற்று: பந்துவீச்சில் மிரட்டிய பாகிஸ்தான்...! 91 ரன்களுக்கு சுருண்டது நெதர்லாந்து

92 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

Update: 2022-10-30 08:51 GMT

பெர்த்,

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடுயாமல் தடுமாறினர். தொடக்க வீரர்கள் மைபர்க் ரன்களிலும் , மேக்ஸ் டி டவுட் ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களில் காலின் அக்கர்மன் ,ஸ்காட் எட்வர்ட்ஸ் நிலைத்து ஆடினர். அக்கர்மன் 27 ரன்களும் , எட்வர்ட்ஸ் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. பந்துதாக்கி நெதர்லாந்து வீரர் பாஸ் டீ லீட் ( ரிட்டையர்ட் ஹர்ட் ) முறையில் வெளியேறினார் .

பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட், முகமது வாசிம் 2 விக்கெட்டுகளும் ,ஷாஹீன் அப்ரிடி . நசீம் ஷா , ஹாரிப் ரவுப் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 92 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்