இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவுக்கு காயம்
விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது.;
செஞ்சூரியன்,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
அப்போது, ஆட்டத்தின் 20-வது ஓவரில் விராட் கோலி அடித்த பந்தை தடுக்க முயன்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவருக்கு தசைபிடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது காயத்தின் தன்மையை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப அவர் போட்டியில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், தற்போது பவுமாவுக்கு பதிலாக அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் அணியை வழிநடத்துவார் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.