டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் மாபெரும் சாதனையை சமன் செய்த தென் ஆப்பிரிக்கா

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Update: 2024-06-27 07:46 GMT

டிரினிடாட்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் ( லீக், சூப்பர் 8 மற்றும் அரையிறுதி சுற்றுகள்) வெற்றி பெற்று, தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் மாபெரும் சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியாவை சமன் செய்துள்ளது.

அந்த பட்டியல்:

1. தென் ஆப்பிரிகா / ஆஸ்திரேலியா - 8 வெற்றிகள்

2. இங்கிலாந்து / இந்தியா - 7 வெற்றிகள்

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள தென் ஆப்பிரிக்கா அதிலும் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவை முந்தி முதலிடம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்