ஐபிஎல் இறுதிப்போட்டி : குஜராத்துக்கு எதிராக ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்;
அகமதாபாத்,
கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று ஐபிஎல் நிறைவு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அவரை தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா டாஸ் வெற்றி பெற்று இருந்தால் பந்துவீச்சை தேர்வு செய்திருப்பேன் என தெரிவித்தார்.