வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மொமினுல் ஹக் ராஜினாமா

வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மோமினுல் ஹக் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-05-31 17:25 GMT

Image Courtesy: PTI

டாக்கா,

கடந்த 2019 முதல் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மோமினுல் ஹக் இருந்து வருகிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை மோமினுல் ஹக் தலைமையிலான வங்கதேச அணி பெற்றது.

ஆனால், அடுத்து நடைபெற்ற 5 டெஸ்ட் ஆட்டங்களில் 4-இல் தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களையும் வங்கதேசம் இழந்தது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு மொமினுல் ஹக்கின் பேட்டிங் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மோமினுல் ஹக் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நன்றாக விளையாடும்போது அணி வெற்றி பெறாவிட்டாலும், அணிக்கு உத்வேகம் அளிக்கும் இடத்தில் நாம் இருப்போம். நான் நன்றாக விளையாடாமல் இருக்கும்போதும், அணி வெற்றி பெறாதபோதும் அதை வழிநடத்துவது கடினமானது. எனவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது சிறந்தது.

எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்த வேண்டும். இது கடினமான முடிவல்ல. கேப்டன் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அது நிறைய அழுத்தங்களைக் கொடுக்கும். வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார். ஆனால், கேப்டனாக இருக்க நான் விரும்பவில்லை. நான் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த முடிந்தால் அது எனக்கும் அணிக்கும் நல்லது என்று நினைக்கிறேன்" என்று மோமினுல் ஹக் தெரிவித்தா

Tags:    

மேலும் செய்திகள்