வெளியேற்றுதல் சுற்று: பெங்களூரு - ராஜஸ்தான் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு

இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில்,ராஜஸ்தான் ராயல்ஸ்,பெங்களூரு அணியை சந்திக்கிறது

Update: 2024-05-22 10:30 GMT

ஆமதாபாத்,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத வேண்டும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

இந்த நிலையில் , பெங்களூரு - ராஜஸ்தான் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த ஐபிஎல் தொடரில் தோல்வியிலிருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பெங்களூரு அணி நம்பியதே அற்புதமான விஷயம். தொடர் தோல்வியினால் அணியின் வீரர்கள் நம்பிக்கையை இழந்திருக்கலாம். ஆனால் அணியில் உள்ள மூத்த வீரர்களான விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் மற்ற அணி வீரர்களை ஊக்கப்படுத்தி சிறப்பாக அணியை வழிநடத்தியுள்ளனர். அதுவும் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மற்ற வீரர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் பெங்களூரு அணியை வெல்ல முடியும். இல்லையென்றால் குவாலிபயர் 1-ல் ஐதராபாத் அணியை கொல்கத்தா அணி எளிதாக வென்றது போல ராஜஸ்தான் அணியை பெங்களூரு எளிதாக வென்று விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்