ஜூனியர் டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

Update: 2024-10-03 09:57 GMT

சென்னை,

இந்தியா - ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸ் முறையே ஆஸ்திரேலியா 293 ரன்னும், இந்தியா 296 ரன்னும் எடுத்தன. 3 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஏனான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 61.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்